தாயின் கையில் குழந்தையாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
நடிகை நித்யா மேனன் தாயின் கையில் குழந்தையாக உள்ள புகைப்படத்தினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை நித்யா மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்தில் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது கிடைத்தது. பின்பு விஜய்யுடனும் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற சினிமாவிலும் நடித்து வருகின்றார்.

கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் தனது திறமையைக் வெளிக்காட்டும் வகையில் உள்ள கதைகளத்தில் நடித்து வெற்றி பெற்று வருகின்றார்.

நடிப்பில் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் நடிகை நித்யாமேனன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நித்யா மேனன், தனது இன்ஸ்டா பக்கத்தில் தாயின் கையில் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |