கடனால் நடுத்தெருவுக்கு வந்த நடிகை நீலிமா.... அதிலிருந்து மீண்டது எப்படி?
பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா தனக்கு ஏற்பட்ட 4 கோடி ரூபாய் கடன் குறித்தும், அதனால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
நடிகை நீலிமா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து பிரபலமானவர் தான் நீலிமா.
இவர் கமல் ஹாசன் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த, தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்பு கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஜோதிகாவின் மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது அதிகமான சினிமா தொடங்களில் நடித்து வரும் இவரின் கணவர் சற்று வயது மூத்தவர் ஆவார். சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு நீலிமாவும் தகுந்த பதில் அளித்திருந்தார்.
கடனால் நடுத்தெருவிற்கு வந்த நீலிமா
21 வயதில் திருமணம் செய்து கொண்ட நீலிமா பின்பு 6 மாதங்களில் அவரது தந்தையை இழந்துள்ளார். பின்பு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளார்.
2017ம் ஆண்டு தன் கணவருடன் சேர்ந்து 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடன் வாங்கி படம் ஒன்றினை தயாரித்துள்ளார்.
அப்படம் இவர்கள் எதிர்பார்த்தபடி நன்றாக வரவில்லை என்பதால் குப்பையில் போட்டுவிட்டாராம். குறித்த கடனால் நஷ்டம் ஏற்பட்டு நடுத்தெருவிற்கு வந்ததாக கூறியுள்ளார்.
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருந்த நீலிமா, தனது நண்பரின் வீட்டில் தான் தங்கியுள்ளார். தற்போது அதிலிருந்து மீண்டு நல்ல நிலைக்கு வந்துள்ளார்.
இந்த கஷ்டத்திலும் இரண்டு சீரியல்களையும் தயாரித்துள்ளார். தனது கஷ்டத்தை குறித்து நீலிமாக கூறுகையில், நாம் சோர்ந்துபோய் உட்கார்ந்து விட்டால் நமக்கு யாருமே கை கொடுக்க வரமாட்டாங்க... நமக்கு நாமே தான் கை கொடுத்து உதவ வேண்டும் என உத்வேகம் அளிக்கும் விதமாக நீலிமா பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
