நடிகை நஸ்ரியாவா இது? படுக்கையில் இருந்து வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவான நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா.
அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
பின்பு நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது குடும்பம், பிஸ்னஸ் என செட்டில் ஆகியுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கட்டிலில் படுத்தப்படி கியூட் சிரிப்புடன் செல்பீ எடுத்த புகைப்படம் ஒற்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் அவர் அணிந்திருக்கும் ஆடையும், கட்டிலில் விரிக்கப்பட்டுள்ள படுக்கைவிரிப்பும் ஓரே மாதிரியாக இருக்கின்றது. இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.