குட்டி பொண்ணா சேட்டை செய்யும் குழந்தை யார் தெரியுமா?
சமிபகாலமாக சமூக வலைத்தளங்களில் டாப் நடிகர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நயன்தாரா
மோடலிங் துறையில் பிஸியாக இந்த நயன்தாரா 2005 ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு தற்போது டாப் நடிகையாகவே மாறி விட்டார்.
பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
சினிமாவிற்குள் வந்து இடைப்பட்ட காலத்தில் கவர்ச்சியை தாராளமாக காட்டி வந்த நயன்தாரா சமிபகாலமாக கவர்ச்சிக்கு முற்றிலும் நோ சொல்லிவிட்டார் எனவும் சொல்லப்படுகின்றது.
சிறு வயது புகைப்படம்
இந்த நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ்சிவனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை, வியாபாரம், சினிமா என படு பிஸியாக இருந்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரின் சிறுவயது புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
அதில் பார்க்கும் போது நயன்தாரா அம்மாவிடம் சேட்டை செய்வது போல் தெரிகிறது.
சிறிய வயது புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இது நம்ம நயனா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |