நமீதா திருமணத்தில் இவ்வளவு குழப்பமா? அவரே பகிர்ந்த விடயம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும், சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், சிறப்பு போட்டியாளர்களாக இந்த வாரம் நடிகை நமீதா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது கணவருடன் இணைந்து பங்கேற்றார்.
இந்நிகழ்சியின் போது தனது திருமணத்தின் போது நடந்த பல நகைப்பூட்டும் சுவாரஸ்யமான விடயங்களை ரசிகர்களுடன் பகிர்துக்கொண்டார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக தினழ்ந்து வரும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் ரியாரிட்டி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரம் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக நடிகை நமீதா மற்றும் அவரின் காதல் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.
அதன் போது தங்களின் திருமணத்தின் போது இடம்பெற்ற சில மறக்க முடியாத விடயங்களை பகிர்ந்துக்கொண்டனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |