நடிகை நமீதாவின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?
திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதல் திருமணம்
தமிழ் திரையுலகில் கடந்த காலங்களில் கவர்ச்சியிலும் தன்னுடைய நடிப்பினாலும் பல கோடி ரசிகர்களை தன் வயப்படுத்தி வைத்திருந்தவர் நடிகை நமீதா.
கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இதனை தொடர்ந்து இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
குழந்தை பிறந்ததிலிருந்து இன்றுவரை குழந்தைகள் தொடர்பான பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
குழந்தைகளின் பெயர்
அந்த வகையில் தற்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபடத்துடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு ’கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ’கியான் ராஜ்’ ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், என்னுடைய இரண்டு குழந்தைகளும் கிருஸ்ணன் எனக்கு கொடுத்த அற்புதங்கள் அதனால் அவருடைய பெயரையே குழந்தைக்கு வைத்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
நமீதாவின் இந்த பதிவு வைரலான நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.