பலரின் கனவு கன்னியாக இருந்த நடிகையாக இவங்க? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
“என் செல்லப்பேரு ஆப்பிள்..” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகையின் தற்போதைய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை முமைத் கான்
தமிழ் சினிமாவில் ஐட்டம் பாடல் என்றாலே டிஸ்கோ சாந்தி, அனுராதா, ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் தான் இருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த கலாச்சாரம் மாறி ஐட்டம் பாடலுக்கு ஆடும் நடிகைகள் கவர்ச்சி கன்னிகளாக மாறி கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படி 2000 ஆம் ஆண்டு காலங்களில் பிரபலமாக இருந்தவர் நடிகை முமைத் கான். சில்க் ஸ்மிதாவால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்திய முமைத் கான் கோலிவுட், பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னடம் என பிஸியாக இருந்தார்.
இவர் வெறும் நடனத்தில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் பிரசாந்த் நடித்த மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
இப்போ எப்படி இருக்காரு பாருங்க
இந்த நிலையில், திடீரென போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கி அவருடைய மார்க்கட்டை இழந்தார்.
அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகிய முமைத் கான் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை மாத்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து தற்போது இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்துள்ளது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “ கம்பேக் கொடுத்தால் நன்றாக இருக்கும்..” என ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |