நடிகை மீனாட்சி சவுத்ரியிடம் இவ்வளவு சொத்துக்களா? அசர வைக்கும் விவரங்கள்
கோட் பட நடிகை மீனாட்சி சவுத்ரியின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மீனாட்சி சவுத்ரி
தமிழில் விஜய் ஆண்டனி நடித்த “கொலை”திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மீனாட்சி சவுத்ரி.
இவர், ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக “சிங்கப்பூர் சலூன்” படத்திலும் நடித்திருந்தார். மாறாக மீனாட்சி நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்த நிலையில், கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமாகி விட்டார்.
தமிழ் சினிமாவில் இவ்வளவு அடிகள் வாங்கியிருந்தாலும் தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகியாக வலம் வருகிறார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பின்னர், சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்க சம்பளத்தை கடகடவென உயர்த்திவிட்டாராம். அதிலும் குறிப்பாக, “சாய் அபயங்கரின் சித்திரபுத்திரி” பாடலில் செம கவர்ச்சியாக ஆடி இளைஞர்களையும் கவர்ந்து விட்டார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், நேற்றை தினம் மீனாட்சி சவுத்ரி தன்னுடைய 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், ஒரு படத்தில் நடிக்க தற்போது ரூ. 5 கோடி வரை சம்பளம் பெரும் மீனாட்சிக்கு மொத்தமாக ரூ. 15 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் மீனாட்சி சவுத்ரிக்கு ஐதராபாத்தில் ரூ. 7 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |