Actress Meena Viral Post: சாதி, மதம் குறித்து நடிகை மீனாவின் வைரல் பதிவு
Meena Viral Post: மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
90களில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மீனா.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் மீனா நடித்துள்ளார்.

இதனைதொடர்ந்து மீனா, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
அதில், "சாதி, மதம், பிறந்த இடம், பாலினம் ஆகியவை நாம் தேர்வு செய்தவை அல்ல. அவை பிறப்பால் கிடைத்தவை. அதனால் அவற்றை நினைத்து பெருமைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக நமது குணநலன், செயல்கள் மற்றும் மனிதநேயத்தை நினைத்து பெருமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மீனாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.