Meena Pongal Celebration: பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய நடிகை மீனா
நடிகை மீனா தனது வீட்டில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய வீடியோ தற்போது ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.
நடிகை மீனா
நடிகை மீனா 90களில் தொடங்கி, 2000கள் வரை தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் தனக்கேற்ற ஒரு சில குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினார். பல முன்னணி நடிகர்களுடன் மீனா நடித்துள்ளார்.
அது வெற்றியிலும் முடிந்துள்ளது. இப்போது இருக்கும் இளைஞர்களிடம் கூட மீனாவின் படம் என்றால் பார்ப்பதற்கு அவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள்.

அந்த அளவிற்கு மீனா அப்போதும் சரி இப்போதும் சரி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இது தவிர மீனா மலையாள சினிமாவில், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தெலுங்கில் நாகார்ஜுனா, சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மீனா இன்று பொங்கல் திருநாளை பாரம்பரிய முறையில் சிவப்பு சேலை உடுத்து கொண்டாடி உள்ளார்.
இந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |