இவரை மாதிரி புருஷன் அமையணும்னு ஆசைப்பட்டேன்! நடிகை மீனா சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, திரையுலகில் 40 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார் நடிகை மீனா.
அதிலும் 30 ஆண்டுகள் நாயகியாக வெற்றிநடை போட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தான் தவறவிட்ட படங்கள், தனக்கு கிடைக்காமலேயே போன கதாபாத்திரங்கள் மற்றும் இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஒரு படத்தில் கூட கல்லூரி மாணவியாக நடிக்கவில்லை.
அதேபோல நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு நடனத்தை மையப்படுத்திய படம் ஒன்றில் நடிக்க முடியாமல் போனதும் வருத்தம் தான்.
மலையாளத்தில் மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தையும், தமிழில் படையப்பா, தேவர்மகன் படங்களையும் தவறவிட்டதும் வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் வில்லியாக நடிக்க வேண்டுமென ஆசை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், கதாநாயகியாக நடித்த போது ஹிருத்திக் ரோஷன் மீது க்ரஷ் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.