இரண்டாவது திருமணம்... நடிகருடன் நெருக்கம்! பொங்கி எழுந்த நடிகை மீனாவின் பதிவு
நடிகை மீனா சமூகவலைத்தள பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
மீனாவின் கோபமான பதிவு
கணவரின் இறப்பிற்கு பின்பு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை மீனா ஒரு சில படத்தில் கமிட்டாகி நடித்து வருவதுடன், தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் நடுவாராக இருக்கின்றார்.
நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், முன்னணி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Rumors are created by haters,
— Meena (@ActressMeena_) July 18, 2024
spread by fools,
and accepted by idiots 🙂#Meena pic.twitter.com/DI8ieqGLVB
இதுகுறித்து, தனது கோவத்தை வெளிப்படுத்தி உள்ள மீனா, வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன, முட்டாள்களால் பரப்பப்படுகிறது. மற்றும் முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |