நடிகர் மம்மூட்டிக்கு கேன்சரா? அதிர்ச்சியான ரசிகர்களுக்கு படக்குழுவினர் கொடுத்த விளக்கம்
மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டி
மலையாளத்தில் மெகா ஸ்டாராக நடிகர் மம்மூட்டி பார்க்கப்படுகிறார்.
இவர், மலையாளம் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதன்படி, மம்மூட்டி தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது மம்மூட்டி புதிதாக மலையாள படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.
அந்த திரைப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார்.
திரைப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், மம்மூட்டி திடீரென பிரேக் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படக்குழுவினர் விளக்கம்
இந்த நிலையில், மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த பிரேக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த ரசிகர்கள் கவலையடைந்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
இப்படியான சூழலில் தான் மம்மூட்டி நடிக்கும் படக்குழு அவரின் உடல் நிலை குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது, “மம்மூட்டி ரமலான் நோன்பு இருப்பதால் விடுமுறையில் உள்ளார். இதனால் சூட்டிங்கில் இல்லை. இந்த பிரேக்கிற்கு பிறகு மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க உள்ளார்'' எனக் கூறியுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |