புதிய கார் வாங்கியது என்ன குற்றமா? நடிகை மமிதா பைஜு ஆவேசம்
நடிகை மமிதா பைஜு சமீபத்தில் புதிய கார் வாங்கியுள்ள நிலையில், இதற்கு கடுமையான விமர்சனம் எழுந்தால் இதற்கு குறித்த நடிகை பதில் கொடுத்துள்ளார்.
நடிகை மமிதா பைஜு
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் மமிதா பைஜு, பிரேமலு, சூப்பர் சரண்யா உட்பட திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக இவர் நடித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழில் ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், கர போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றதுடன், தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம்வருகின்றார்.

புதிய கார் வாங்கிய மமிதா
இந்நிலையில் நடிகை மமிதா பைஜு 40 லட்சம் ரூபாய்க்கு புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டுள்ளது.
இந்த விமர்சத்திற்கு மமிதா பைஜு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், புதிய கார் வாங்கியதில் என்ன தவறு இருக்கின்றது? புது கார் வாங்கியது குற்றமா? பிரபலங்கள் கார் வாங்குவது ஒன்றும் தவறில்லையே....
கடினமாக உழைத்தால் நீங்களும் என்னைவிட பெரிய கார் நீங்களும் வாங்கமுடியும் என்று கூறியுள்ளார். தனது உழைப்பின் மூலமாக கார் வாங்கியதற்கு எழும்பிய கேள்வி மமிதா கொடுத்த பதில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |