இறப்புக்கு யார் காரணம்? தற்கொலைக்கு முன் வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ
பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்துகொள்வதற்கு முன் பேசிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
போஜ்புரி நடிகை
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த மார்ச் 26ஆம் திகதி , பிரபல போஜ்புரி நடிகையான அகன்ஷா துபே ஹொட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது இறப்புக்கு காரணம் முன்னாள் காதலர் அமர்சிங் என அகன்ஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில், பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அகன்ஷா இறுதியாக கண்ணீருடன் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னாள் காதலர் தான் காரணம்
குறித்த வீடியோவில், 'மக்களுடன் நான் பேசப்போவது இதுதான் கடைசி. எனக்கு இந்த உடலில் இருக்க விருப்பமில்லை. எனது மரணத்திற்கு முன்னாள் காதலர் அமர்சிங் தான்' என கூறியுள்ளார்.
இந்த ஆதாரம் அமர்சிங்கிற்கு எதிராக வலுவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த வீடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்து தடவியல் சோதனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அமர்சிங் உடன் தொடரில் இருந்தவர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகன்ஷா துபே நபர் ஒருவருடன் ஹொட்டலுக்குள் நுழைவதும், அதன் பின்னர் அவர்கள் அறைக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் காட்டப்பட்டிருந்தது.
குறித்த நபர் ஹொட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்கு பிறகு, அகான்ஷா இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் காணப்பட்ட வீடியோ வெளியானதாக கூறப்படுகிறது.