Lakshmi Memon: நடிகை லட்சுமி மேனனா இது? உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய காட்சி
நடிகை லட்சுமி மேனன் உடல் எடை அதிகரித்து வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து கும்கி, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
பின்பு சில ஆண்டுகள் தமிழ் சினிமாவிலிருந்து விலகியிருந்த லட்சுமி மேனன், கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடையாளம் தெரியாத காணொளி
தொடர்ந்து யோகி பாபுவுடன் இணைந்து மலை மற்றும் ஆதியுடன் இணைந்து சப்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இதில் சப்தம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அவருடைய லேட்டஸ்ட் நடனம் ஆடும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறித்த காணொளியில் லட்சுமி மேமன் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் கும்கி படத்தில் பார்த்த நம்ம லட்சுமி மேனனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |