பிரபல நடிகை லட்சுமி மரணமா? தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி
பிரபல நடிகையான லட்சுமி மரணமடைந்ததாக வெளியான தகவலையடுத்து அவரே ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1970களில் தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் லட்சுமி.
400 படங்களுக்கு மேல் நடித்துள்ள லட்சுமி, பல விருதுகளை வாங்கி குவித்தவர்.
இந்நிலையில் இன்று காலை லட்சுமி மரணமடைந்துவிட்டதாக செய்திகள் பரவ பலரும் சோகத்தில் மூழ்கினர்.
ஆனால் அது நடிகை லட்சுமி இல்லை என்றும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை என்பதும் தெரியவந்தது.
லட்சுமி அளித்த விளக்கம்
இதுகுறித்து அவரே விளக்கம் அளித்து ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், '' இன்று காலையில் இருந்து போனில் பல அழைப்புகள் வந்தது.
இன்று பிறந்தநாள்கூட இல்லையே, என்ன நடந்தது என விசாரிக்கும் போது தான் “லட்சுமி இறந்துவிட்டதா” செய்திகள் வந்தது தெரியவந்தது.
இதுக்கெல்லாம் நான் பயப்படப்போவதும் இல்லை, கவலைப்படப்போவதும் இல்லை. பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்துதான் போவார்கள்.
ஆனால் ஏன் இதை காரணம் இல்லாமல் பரப்பிட்டு இருக்காங்கன்னு தெரியலை, பலரும் அக்கறையாக விசாரித்ததில் மகிழ்ச்சி தான்.
நான் நன்றாக இருக்கிறேன், எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள், வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.