சீரியலில் களமிறங்கிய நடிகை குஷ்பு.... வெளியான புதிய அப்டேட்
நடிகை குஷ்பூ சரோஜினி என்ற சீரியலில் நடிக்க உள்ள நிலையில், இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில், 14 வயதாக இருந்த போது ஷிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
பின்பு தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 80 மற்றும் 90 காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின்பு இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆனாலும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
சீரியலில் குஷ்பூ
நடிப்பையும் தாண்டி கணவரின் சில படங்களை தயாரித்து வரும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.
பல சீரியல்களில் நடித்துள்ள இவர், கடந்த சில வருடங்களாக முழுநேர சீரியல் நடிகையாக மாறாமல் இருக்கின்றார்.
இந்நிலையில் பிரபல ரிவியில் சரோஜினி என்ற சீரியலில் நடிக்க உள்ளாராம். இந்த சீரியலின் பூஜை போடப்பட்டுள்ள நிலையில், இதில் வேறொரு ரிவி சீரியல் நடிகையும் இணைந்திருக்கின்றாராம்.
குறித்த நடிகை யாரெனில் தற்போது சின்ன மருமகள் சீரியலில் நடித்து வரும் பானு, குஷ்புடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
