நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு... தங்கம் மட்டும் இத்தனை கிலோவா?
நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்த விபரத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் இயக்குனர் சுந்தர் சி-யைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சமீபத்தில் தனது மகளின் திருமணத்தினை கோலாகலமாக நடத்தினார். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியதுடன், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இவர் ரஜினியுடன் தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் அறிமுகமானார். மிகவும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

சொத்து மதிப்பு என்ன?
நடிகை குஷ்புவிடம் ரூபாய் 100 கோடி மேல் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இவரிடம் 3.5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளியும் இருப்பதாக தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இவர் சினிமாவில் சமாதித்ததை மற்ற தொழில்களிலும் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலமாகவும் நடிகை குஷ்புவிற்கு அதிகமான வருமானம் வருவதாகவும் கூறப்படுகின்றது..

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |