திருமணத்தின் பின்னும் இப்படியா? செம ஹொட் போஸ் கொடுத்த நடிகை
நடிகை கீர்த்தி பாண்டியன் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் கீர்த்தி பாண்டியன்.
இவர் 2019 ஆம் ஆண்டில் வெளியான ‘தும்பா’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றுக்கொடுத்தது.
அதனை தொடர்ந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அன்பிற்கினியாள்’ படத்தில் நடித்தார்.இந்த படத்தில் அவரது தந்தை அருண்பாண்டியனும் நடித்திருந்தார்.
அதனை தொடர்ச்து சிறிய இடைவெளிக்குப் பின்னர் அவருக்கு ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார். படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியனுக்கு காதல் ஏற்பட்டது.எனவே அவரையே திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் நடித்துவரும் கீர்த்தி பாண்டியன் சமூக ஊடகங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் செம ட்ரெண்டிங்கான உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கீர்த்தி பாண்டியன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |