பிரபல நடிகையின் வீட்டில் தீவிபத்து! அலறியடித்து ஓடியதால் பரபரப்பு
தமிழ் நடிகையான கனகா வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை கனகா
தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகிய இவருக்கு சமீபத்தில் கேன்சர் என்று கூறப்பட்டது.
ஆனால் அவை வதந்தி என்று தெரியவந்த நிலையில், இவர் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வீடு பார்த்து அங்கு வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது, அருகில் இருந்த துணியில் தீப்பொறி பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. நடிகை கனகா வீட்டிலிருந்து கரும்புகை வந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் நடிகை கனகா வீட்டில் இருந்த பெரும்பாலானா பொருட்கள் தீக்கு இரையாகியுள்ளது.