மும்பையில் 70 கோடிக்கு வீடு.. சூர்யாவை விட அதிகமாக சொத்து வைத்திருக்கும் ஜோதிகா
ஜோதிகாவின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா இவர்களும் அடங்குவார்கள்.
சுமாராக 4 வருடங்கள் காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணமாகி பல வருடங்கள் கடந்தாலும் சூர்யா - ஜோதிகாவின் காதல் விவாகரம் இன்றும் பேட்டிகளில் பேசப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் சூர்யா - ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பின்னர் 4 வருடங்களுக்கு பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.
சொத்து விவரங்கள்
இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகை ஜோதிகா அவருடைய 46வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த தினத்தையோட்டி ஜோதிகாவின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நடிகை ஜோதிகா, சென்னையில் 20,000 சதுர அடியில் மாபெரும் வீடு மற்றும் மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அபார்ட்மெண்ட் வைத்து இருக்கிறார். ஒரு படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக நான்கு முதல் ஐந்து கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
அத்துடன், BMW மற்றும் ஆடி கார்கள் வைத்திருக்கிறார். மொத்தமாக ஜோதிகாவிடம் 333 கோடி வரையிலான சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. சூர்யா- ஜோதிகா எனக் கூறும் பொழுது சொந்தமாக தயாரிப்பு 2D நிறுவனம் வைத்திருக்கிறார்.
இதன் மூலம் மாதம் மாதம் வருமானம் வரும். ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு, விளம்பரம் மற்றும் பெரிய ப்ராண்டுகளுக்கு ப்ராண்ட் அம்பாசிடராகவும் ஜோதிகா இருக்கிறார். இப்படி 46 வயதிலும் பரபரப்பாக இருக்கும் நடிகை ஜோதிகாவிடம் கணவரை விட அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |