ரோபோ சங்கர் வீட்டில் அடுத்த மகிழ்ச்சி செய்தி... குவியும் வாழ்த்துக்கள்
ரோபோ சங்கர்
சின்னத்திரையில் இருந்து ஒரு சிலர் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ரோபோ சங்கர்.
ரோபோ சங்கருக்கு அறிமுகமே தேவையில்லை. அவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருக்கிறார்.
இவர், அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இந்த படத்தின் ஊடாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். அதனை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்தார்.
அண்மையில் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருக்கும் இந்திரஜா ஷங்கருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இதில் பல சினிமா பிரபலங்களும் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினார்கள். அதனை தொடர்ந்து இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தனது மகன் பிறந்து 100 நாட்கள் கடந்த நிலையில், அதை விழாவாக கொண்டாடிய இந்திரஜா மற்றும் அவரது குடும்பத்தினர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருதுடன் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |