மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நடிகை
தெலுங்கு பட நடிகை ஹம்சா நந்தினி புற்றுநோயில் மீண்டு வந்து வீடியோ காட்சியொன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சினிமா பயணம்
கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான “நான் ஈ” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நானி, சுதீப், சமந்தா ஆகிய மூன்று நடிகர்ளும் தங்களது கதாபாத்திரத்தில் திரையரங்கையே மிரள வைத்திருப்பார்கள்.
மேலும் நான் ஈ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஹம்சா நந்தினி. இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் எப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹம்சா நந்தினி கடந்த 4 மாதங்களாக சமூக வலைத்தளப்பக்கங்களிலிருந்து விலகியிருந்தார்.
இது குறித்து அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக இவர் தன்னுடைய தலைமுடி மொட்டையாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
No matter what life throws at me, no matter how unfair it may seem, I refuse to play the victim. I refuse to be ruled by fear, pessimism, and negativity. I refuse to quit. With courage and love, I will push forward. pic.twitter.com/GprpRWtksC
— Hamsa Nandini (@ihamsanandini) December 20, 2021
மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நடிகை
தொடர்ந்து இவர் மொட்டையாக இருக்கும் புகைப்படத்துடன், தனக்கு மூன்றாம் வகை மார்ப்பக புற்று நோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் மிகவும் சோகமாக பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஹம்சா நந்தினி தற்போது குணமடைந்து இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவை பார்க்கும் போது அவருக்கு தலைமுடி வளர ஆரம்பித்து விட்டது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருதுடன், இதனை பார்த்த ரசிரகள், குறித்த நடிகைக்கு ஆறுதலளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.