அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கோபிகா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை கோபிகாவின் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.
கோபிகா
நடிகை கோபிகா, 1985ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர்.
சினிமா மீது ஆர்வமுள்ள கோபிகா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர்.
2002ஆம் ஆண்டு ‘பிரநயமணிதுவல்’ என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த படம் வெற்றியடைய அடுத்தடுத்து பல படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது.
சினிமா பயணம்
தமிழில், ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார்.
இவரது ஆட்டோகிராப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றே சொல்லலாம்.
திருமணத்திற்கு வாழ்க்கை
2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனார் .
இந்த இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பது முற்றிலும் நிறுத்திவிட்டு தற்போது இவர்களை கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
குடும்பம்
தற்போது இவரது குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில் நடிகை கோபிகா அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலும் மாறிப்போய்யுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.