கொடிக்கட்டி பறந்த நடிகை காந்திமதி.. கடைசியில் சொந்தத்தால் அனாதையாக இறந்தது எப்படி?
தமிழ் சினிமாவில் பழம்பெரு நடிகையான காந்திமதி சில படங்களில் அவரது கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார்.
காந்திமதி நடித்த சுவரில்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன், 16 வயதினிலே, முத்து போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
ஒரு கட்டத்தில் சினிமா மார்க்கெட் குறைந்த பிறகு மை டியர் பூதம், கோலங்கள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முத்து படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
காந்திமதி சினிமாவில் கவனம் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ்க்கையை கோட்டை விட்டார். சரியான வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் விட்டதால் கடைசிவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இவர், தன்னுடயை தங்கையின் உதவியோடு வாழ்ந்தபோது, அவர்களின் குழந்தையையும் வளர்த்து வந்துள்ளார். ஆனால் பணம் இருக்கும் வரை சொந்தம் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப அவர் சம்பாதிக்கும் வரை அவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கிய அவரது தங்கை காந்திமதிக்கு புற்றுநோய் வந்து அவஸ்தைப்பட்ட போது கண்டுகொள்ளவில்லையாம்.
மேலும், காந்திமதி கடைசி காலத்தின்போது அவருக்கு தண்ணீர் கூட கொடுக்கக்கூட ஆளில்லாமல் தனிமையில் மனம் நொந்தே இறந்துவிட்டாராம்.
காலங்கள் இவரை மறந்தாலும், இவர் நடித்த அற்புதமான திரைப்படங்கள் என்றும் மக்கள் மனதில் ஒலிக்கும்....