பச்சை நிற சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை துஷாரா விஜயன்... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை துஷாரா விஜயன் பச்சை நிற சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகின்றது.
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை துஷாரா விஜயன்.
அதனை தொடர்ந்து வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாகவும் அடையாளமாகவும் அமைந்தது, மேலும் துஷாரா விஜயன் தனது திறமையை சர்வதேச அளவில் நிறுவுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே இவர்தான் என்ற விம்பத்தை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பலாத்கார காட்சியில் அவ்வளவு போல்டாக நடித்திருப்பார்.
அதனால் ரசிகர்களின் பாராட்டுக்களையும் குவித்தார். அண்மையில் விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
சினிமாவில் மட்டுமன்றி சமூக ஊடகங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் துஷாரா விஜயன் ட்ரெண்டிங் சேலையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |