விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியா... கார் டிரைவர் பலி!
பெரம்பலூர் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை தேவி பிரியா விபத்துக்குள்ளான சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்து தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவிப்பிரியா
சினிமாவின் பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான தேவிப்பிரியா தற்போது சின்னத்திரையில் ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகையாக வலம் வருகின்றார்.

மதுரையை சேர்ந்த இவர், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே, டாக்குமெண்ட்ரியில் நடிக்கும் வாய்ப்னை பெற்றார். அதனை தொடர்ந்து , ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
பின் அஜித் நடித்த வாலி படத்தில், அவரது கேரக்டர் நன்றாக பேசப்பட்டது. தொடர்ந்து ஊரு விட்டு ஊரு வந்து, ஏரிக்கரை பூங்காற்றே போன்ற பல படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்தி சீரியலில் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார்.
அதைத் தொடர்ந்து, சின்னத்திரையில் அத்திப்பூக்கள், ஆசைகள், அச்சம் மடம் நாணம், சொர்க்கம் போன்ற தொடர் என 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து பிரபல வில்லி நடிகையாகவும் வலம் வருகின்றார். மேலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் ஒருவர் பலி
இந்நிலையில், நடிகை தேவி பிரியா விபத்தில் சிக்கிய விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே சென்னை - திருச்சி NH-ல் பன்சராகி நின்ற நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
காரின் டயரை மாற்றி கொண்டிருக்கும்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில், காரின் ட்ரைவர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |