தேவயாணி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்! புடவையில் அம்மாவை மிஞ்சிட்டாரே
நடிகை தேவயாணியின் மகள் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவயானி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் தேவயானி, இயக்குனர் ராஜகுமாரானை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். சின்னதிரையிலும் நடிப்பை துவங்கிய இவர் தனது நடிப்பினால் இல்லத்தரசிகளை அதிகமாக கவர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஈரோடு அருகே இவரது போட்டத்திற்கு பக்கத்தில் இருந்த காலி பிளாட்களை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றார். இவரது கணவர் ராஜ்குமாரின் ஊரே ஈரோடு ஆகும்.
தரிசு நிலமாக இருந்த குறித்த நிலம் அனைவரையும் பொறாமை பட வைக்கும் அளவிற்கு பூத்து குலுங்கி வருகின்றது.
மகளின் புகைப்படம் வைரல்
லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் பிரபல ரிவி சீரியலான புதுபுது அர்த்தங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் தேவயானியின் மகள் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.
ஆம் வெள்ளை நிற புடவையில் அச்சுஅசல் தேவயானியைப் போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.