பல ஆண்டுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் பானுப்பிரியாவின் தங்கை- பயங்கர எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் ராமராஜன் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் தான் எங்க ஊரு பாட்டுக்காரன். இந்த படத்தின் மூலம் பலருக்கும் பிடித்த நாயகியாக மாறியவர் சாந்திப்பிரியா.
நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் சாந்திப்பிரியா. இதனையடுத்து, இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்று பலரும் அறியாமல் இருந்த நிலையில், தற்போது ஓடிடி மூலம் புதிதாக எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்த இவர், இப்போது OTT மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.
சாந்திப்பிரியா அவர்கள் ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player-க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
