தனுஷுடன் ஜோடி போட்ட இந்த நடிகையை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்பட நடிகை அபர்ணா பிள்ளையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அபர்ணா பிள்ளை
அபர்ணா பிள்ளை தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2004ம் ஆண்டு தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமான இவர் மிஸ் சென்னை போட்டியில் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடித்த போதே இந்த தனுஷ் பட வாய்பை பெற்றுள்ளார்.
முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்திய இவருக்கு இதனை தொடர்ந்து ABCD, கண்ணுக்குள்ளே போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் இதுவரையில் 4 தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அடையாத காரணத்தால் 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது மகளும் இருக்கின்றார்.
இந்நிலையில் இவரின் ரீசென்ட் புகைப்படங்கள் இணையத்தில தற்போது வைரலாகி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது ஆளே மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |