குடும்பத்துடன் சென்று புதிய சொகுசு கார் வாங்கிய அபர்ணா தாஸ் – வைரலாகும் வீடியோ!
நடிகை அபர்ணா தாஸ் தனது குடும்பத்துடன் புதிய வெள்ளை நிற சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
அபர்ணா தாஸ்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து இவர் தொடர்ந்தும் சினிமாவில் ஈடுபாடு காட்டுவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்கப்பட்டது.

ஆனால் அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.அதன்பிறகும் சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அபர்ணா தாஸின் கணவர் தீபக் பரம்போல்,மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய சொகுசு கார்

சினிமா போட்டோ ஷுட், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை அபர்ணா தாஸ் தற்போது புதியதாக சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார். வெள்ளை நிற Luxe Moto காரை வாங்கியுள்ளார், புதிய காரை தனது குடும்பத்துடன் சென்று வாங்கிய அழகிய தருணத்தின் காணொளியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |