என்னை கூட்டிட்டு போய் ஏமாற்றிட்டாங்க! பிக்பாஸ் பிரபலம் பகீர்
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பிரபல நடிகை தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6 இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், போட்டியாளர்களை யார் என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் வெளியே வந்த அனுஸ்ரீ பேட்டி ஒன்றில் பல ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். இவர் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் நடந்த அநியாயம்
பிக்பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பது மாதிரி எதுவும் இல்லை என்றும் என்னை அவர்கள் ஒரு நிமிடம் கூட காட்டவில்லை என்றும் எனது அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களிடம் போராடியும் என்னுடைய காட்சியை அவர்கள் ஒளிபரப்பவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
நாமினேஷனில் நான் சேஃப் ஜோனுக்கு வந்த போதும் என்னை எலிமினேட் செய்தார்கள் என்றும் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் காப்பாற்றிவிட்டு மற்றவர்களை வெளியேற்றுவதுதான் நிகழ்ச்சியின் உண்மையான சொரூபம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேண்டியவர்களை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்றால் எதற்காக தேவையில்லாமல் ரசிகர்களை ஓட்டு போட வைக்கிறீர்கள் என்றும் நாங்கள் சண்டை போட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஸ்ரீ கடந்த 80, 90களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்த அனுராதாவின் மகள் என்பதும் இவர் நடிகை மற்றும் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.