கண்ணு பட்டுட்ட போகுது... சுத்தி போடுங்கள்... அனிகா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
நடிகை அனிகா துளியும் கிளாமர் காட்டாமல் வெள்ளை நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
ஆனால் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸை குவித்து வருகின்றது. ஆம் எப்பொழுதும் கவர்ச்சி உடையில் போட்டோஷுட் எடுத்து வெளியிடும் அனிகா தற்போது சல்வாரில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
வெள்ளை நிற சல்வாரில்... கச்சிதமாக தன்னுடைய அழகை வெளிப்படுத்தியுள்ள இவரின் புகைப்படத்திற்கு கண்ணு பட்டுட்ட போகுது... சுத்தி போடுங்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |