திருமணமான பின்னரும் மார்கட் குறையாத நடிகை- நாள் சம்பளம் கோடிகளிலாம்.. யார் தெரியுமா?
முன்னணி ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு கதாநாயகியொருவர் சம்பளம் வாங்குவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சினிமாவை பொறுத்தவரையில் கதாநாயகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
சுமாராக கதாநாயகியொருவருக்கு 10 - 15 கோடிகள் வரை கூட சம்பளம் வழங்கப்படுகின்றது. அத்துடன் சில நடிகைகள் தயாரிப்பாளருக்கு சில நிபந்தனைகள் போட்டு, அதற்கான அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்கிய பின்னர் தான் திரைப்படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறார்கள்.
நீயா நானா: குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத தம்பதிகள்- Dink lifestyle-ஐ விளாசும் தாய்மார்கள்.. பதிலை பாருங்க
அந்த வகையில் நடிகை நயன்தாரா, எந்த ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என சொல்வதோடு, ஷூட்டிங் வெளியூரில் நடக்கும் போது குழந்தைகளை தூக்கி வருவேன். அதற்கெல்லாம் தயாரிப்பாளர்கள் தான் காசு கொடுக்க வேண்டும் என் நிபந்தைகள் போட்டியிருந்தார்.
நாள் சம்பளமாக 1 கோடி வாங்கும் நடிகை
இந்த நிலையில், 90-களில் 30 வயதை எட்டினாலே பட வாய்ப்புகள் நடிகைகளுக்கு மறுக்கப்படும், ஆனால் இந்த காலத்தில் 40 வயதை எட்டிய நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பின்னரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களுக்கு 1 கோடி வரை நாள் சம்பளம் வழங்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பிரபல நடிகை ஆலியா பட் 10 நாட்கள் படங்களில் நடிப்பதற்கு 9 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கிறாராம்.
அதன்படி, பார்த்தால் இவர் திருமணமாகி, தற்போது அழகிய பெண் குழந்தையொன்றும் உள்ளது. இப்படியொரு சமயத்தில் ஆலியாவிற்கு ஒரு கோடி வரை சம்பளம் வழங்குவது ரசிகர்களுக்கு உட்பட திரைப்பிரபலங்களுக்கும் வியப்பாக உள்ளது.
ஆலியா பட்டின் கியூட் ரியாக்ஷன்களுக்கே பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இது தான் இவரின் சம்பள ஏற்றத்திற்கு காரணம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |