கணவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட பாலிவுட் நடிகை- எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நடிகையொருவர் அவருடைய கணவரை விட அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆலியா பட்- ரன்பீர் கபூர்
திரைத்துறையில் நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் கொள்வது வழக்கமாகி வருகின்றது.
அப்படி திருமணம் செய்யும் பொழுது இருவரில் ஒருவர் அதிகமாக சொத்து கொண்டவராக இருப்பார்கள்.
அந்த வகையில், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட் - கணவர் ரன்பீர் கபூரை விட அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவரை விட அதிகமான சொத்து மதிப்பு
இந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களில் ஆலியா பட் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன், ரன்பீர் கபூர் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
ஆலியா பட்- ரன்பீர் கபூர் இருவரும் இணைந்து மும்பையின் பந்த்ரா பகுதியில் பாலி ஹீல்ஸ் என்ற இடத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களா உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.720 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அதில், ஆலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ.517 கோடி எனவும், ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு ரூ.203 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கணவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஆலியா பட் திகழ்கிறார்.
ஆல் லைன் புடிக் பிராண்ட் ஆலியாவுக்கு சொந்தமானது. நடிப்பை தாண்டி தொழில் உள்ளிட்ட விஷயங்களிலும் வருமானம் ஈட்டி வருகிறார். EdaMamma என்ற குழந்தைகளுக்கான உடை அலங்கார நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)