குவியும் படவாய்ப்புகள்... அடுத்தடுத்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட அதிதி!
தமிழில் அடுத்தடுத்து பல படங்களை கை வசம் வைத்திருக்கும் அதிதி தற்போது இணையத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகை அதிதி
தமிழ் சினிமாவில் பிரமாண்டத்திற்குப் பெயர்போன இயக்குனர் தான் ஷங்கர் இவரின் மகள் தான் தற்போது வளர்ந்து வரும் நடிகை அதிதி ஷங்கர்.
இவர் விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் மாவீரன் திரைப்படமும் வெளியாகியிருந்தது.
மேலும், தற்போது அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதில் மட்டுமல்லாமல் இவர் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் பாடும் பாடல்களும் பட்டித் தொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவிற்கு பிரபலமாகி விடுகிறது.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், நடிகை அதிதி சூர்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதிதியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 9 லட்சத்து 77 ஆயிரம் ரசிகர்களை வைத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |