அரிய வகை கருப்பை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை- ஆறுதல் கூறும் ரசிகர்கள்
நடிகை அடா சர்மா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அரிய வகை நோய்கள்
தென்னிந்தியாவின் முன்னணி நடியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கபட்டிருந்தார்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது தான் கொஞ்சம் நலமாக இருக்கிறார்.
இவரை தொடர்ந்து பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு மூளை நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏடிஎச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய போது பகத் சிகிச்சை பெற்று வருவதாக கூறியிருந்தார்.
இந்த வரிசையில் அடுத்து இடம்பிடித்திருப்பவர் நடிகை அடா சர்மா.
இவர் “எண்டோமெட்ரியோசிஸ்” என்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக பேட்டியொன்றில் ஓபனாக பேசியுள்ளார்.
கால்ஷீட் கொடுக்க முடியவில்லை..
எண்டோமெட்ரியோசிஸ் நோய் வந்தவர்களுக்கு இடுப்பில் அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பால் நடிகை அடா சர்மா நரக வேதனை அனுபவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், 48 நாட்களுக்கு மென்சஸ் பிரச்சனையால் அவதிப்பட்டதாகவும் இதனால் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சர்மா ரசிகர்கள் ஆறுதலளிக்கும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
