நடிகர் விவேக் தொடர்ந்து கவலைக்கிடம்- சற்றுமுன் வெளியான மருத்துவமனையின் பரபரப்பு அறிக்கை!
பிரபல காமெடி நடிகர் விவேக் சில மணிநேரங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இதயம் செயல்படுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் விவேக்கிற்கு இதயச் செயல்பாட்டை தூண்டும் எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களும் சுகாதாரத் துறை செயலாளரும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது பேசிய அவர், விவேக்கிற்கு ஏற்பட்டது முழுமுழுக்க மாரடைப்பு ஆகும். கோவிட் தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
விவேக்கிற்கு கொரோனா சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை. அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதிலுமே, கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. இது விவேக்கிற்கு வந்தது முதல் மாரடைப்பு. மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்ததால் அவர் மயங்கியுள்ளார்.
மேலும், 100 சதவீதம் அடைப்பு இருந்தால் இதயம் செயல்பாடே நின்று விடும். அதுதான் விவேக்கிற்கு நிகழ்ந்தது. விவேக்கிற்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என மருத்துவர்களும் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளியான மருத்துவ அறிக்கையிலும் விவேக்கின் உடல்நிலை குறித்து 24 மணிநேரத்திற்கு பிறகே தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் நலமுடன் திரும்பி வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.