ஜனங்களின் கலைஞர் நடிகர் விவேக் விடைபெறும் கடைசி தருணம்... இறுதி சடங்கின் நேரலை

death celebrity vivek live vidoe
By Manchu Apr 17, 2021 09:33 AM GMT
Manchu

Manchu

Report

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று காலமானார். சினிமாவில் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த இவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த விவேக்?

சின்னக் கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் இயற்பெயர் விவேகானந்தன். 1961ம் ஆண்டு நவ., 19ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கய்யா - மணியம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் பட்டம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன் மதுரையில் டெலிபோன் ஆபரேட்டராகவும், அதன்பின் சென்னை வந்து டிஎன்பிஎஸ்ஸி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமைச் செயலகத்தில் இளங்கலை உதவியாளராகவும் பணியாற்றினார்.

இதற்கிடையே மெட்ராஸ் ஹ்யூமர் கிளப்பில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அப்போதுதான் இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகம் கிடைக்க1987ல் வெளிவந்த "மனதில் உறுதி வேண்டும் திரைப்டத்தில் உதவியாளராக இருந்ததோடு மட்டுமின்றி கதையின் நாயகி சுஹாசினியின் சகோதரனாக நடிக்கும் வாய்ப்பினை பெற்று ஒரு நடிகனாக தமிழ் திரையுலகில் தனது கால்தடத்தை பதித்தார்.

அதனைத் தொடர்ந்து பாலசந்தரின் புது புது அர்த்தங்கள்,திரைப்படத்தில் நடித்தார், இதில் இவரின் வசனமான "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்" இந்த வசனம் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.


அதன் பிறகு பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல் ஆகிய படங்களிலும் பிற இயக்குநர்கள் இயக்கத்தில் வெளிவந்த "கேளடி கண்மனி, நண்பர்கள், இதயவாசல், புத்தம் புது பயணம்" என இவர் நடிப்பில் வந்த படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கின. 90களுக்கு பின் திருப்பம்"வீரா, உழைப்பாளி" போன்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களில் தோன்றி நடிக்கத்தொடங்கினார்.

ஆனாலும் நடிகர் விவேக் மக்கள் மனதில் இடம் பிடித்தது 90களின் பிற்பகுதியில் என்றே கூற வேண்டும் . அன்றைய காலக்கட்டத்தில் வெளிவந்த "காதல் மன்னன்", "உன்னைத்தேடி', வாலி போன்ற அஜித் படங்களிலும், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த "கண்ணெதிரே தோன்றினாள்", "பூமகள் ஊர்வலம்", "ஆசையில் ஓர் கடிதம்" போன்ற படங்களில் நாயகனின் நண்பனாக வந்து அசத்தினார்.

பின்னர் 2000 களில் வெளியான குஷி", "மின்னலே","டும் டும் டும்", ரன், "தூள்", "சாமி", "பார்த்திபன் கனவு" ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியா தனிப் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வரத் தொடங்கினார்.

2000 பிறகு வந்த படங்களில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு திரைப்படத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை துணிவோடு எடுத்துரைத்தவர் நடிகர் விவேக்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இயற்கை சீரழிவு, அரசியலில் நிலவும் ஊழலையும் தனது நகைச்சுவை நடிப்பில் வசனங்களாக உதிர்த்து அதனை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் சின்னக்கலைவாணர் விவேக்.


அதே சமயம் மரங்களின் அழிவுக்கு காரணம் மனிதர்களாகிய நாம் தான் எனவே செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரம் நடவேண்டும் என்ற கொள்கையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவேன் என கூறி நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரம் நட்டு வந்தார்.

நடிகர் விவேக்கிற்கு அருள்செல்வி என்ற மனைவியும், தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் பிரசன்ன குமார் இறந்துவிட்டார். அந்த சமையத்தில் மிகுந்த மன உளைச்சலில்இருந்தார்.

அதனால் சில ஆண்டுகள் சினிமால் விலகியிருந்தார். பின் அதிலிருந்து மீண்டு,நடிக்கத் தொடங்கினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மீது அதீத அன்பு கொண்ட நடிகர் விவேக்.அப்துல் கலாமின் பசுமை இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றதில் விவேக்கிற்கு முக்கிய பங்கு உண்டு.

தான் எங்கு பேச சென்றாலும் அப்துல் கலாமை நினைவுக்கூறாமல் அவர் பேசியது குறைவே என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் மீது பற்று கொண்டிருந்தார்.

போய் வாருங்கள் சின்ன கலைவாணரே! விண்ணிலும் ஒலிக்கட்டும் உங்கள் விவேகமான வசனங்கள்..

மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US