4 ஆவது திருமண நாளில் மீண்டும் அப்பாவான விஷ்ணு விஷால்... குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் விஷ்ணு விஷால் கர்ப்பமாக இருந்த மனைவி ஜுவாலா கட்டா பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும் 4 ஆவது திருமண நாளில் தான் மீண்டும் அப்பாவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிகுழு திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.
முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தொடர்ந்து வித்தியாசமான கதைகதைகளை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.
இவர் நடிப்பில் வெளியாக கட்டா குஸ்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரைவேற்பை பெற்றது. அடுத்தாக விஷ்ணு நடிப்பில் இரண்டு வானம் படம் வெளியாக உள்ளது, ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.
இதுதவிர கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகத்தின் படிப்பிடிப்பும் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால், கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கின்றார்.
ஆனால் இவர் சில காரணங்களால் கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அகன் பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து 2021 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜுவாலா கட்டா இவர்களின் 4 ஆவது திருமண நாளான இன்று பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
அப்பா, அம்மா, மகள் மூன்று பேரின் கைகள் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தன் மகன் ஆர்யன் தங்கச்சி பாப்பாவை சந்தோஷமாக பார்க்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் வீட்டிற்கு குட்டி தேவதை வந்திருப்பதை அறிவித்திருத்திருக்கிறார் விஷ்ணு விஷால். குறித்த பதிவுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |