பேரன் கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விஜயகுமாரின் குடும்பம்! தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் தமிழ் சினிமாவில் நடிப்பில் களமிறங்கிய நிலையில், இவர் நடிக்கும் படம் தற்போது இறுதிகட்ட நிலையை அடைந்துள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே சினிமாவில் நடித்து புகழ் பெற்றவர் தான்.
இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பமாக இருக்கும் நிலையில், மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் திரையுலகில் அசத்தி வருவதுடன், தற்போது அருண் விஜய்யின் மகன் சினிமாவில் கலமிறங்கியுள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்னவ் நடித்துள்ளார்.
குழந்தைக்கும், நாய்க்கும் இடையிலான உறவைப் பற்றி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ், இப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அருண் விஜய், மிகவும் பெருமையான தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video