விஜயகாந்தின் தம்பிக்கு இப்படி ஒரு நிலையா...! என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சகோதரர்கள் மதுரையில் செய்யும் தொழில் விபரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜயகாந்த்
தேமுதிக கட்சியில் தலைவராகவும், எதிர் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்த விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி காலமானார்.
நடிகர் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர்.
இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார்.
விஜயகாந்த் நல்ல மனிதர், இரக்க குணம் உள்ளவர், எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் கொண்டவர் என்று பலரும் கண்ணீருடன் விஜயகாந்தை பார்த்து சென்றனர்.
ஒரு மனிதராகவும் , நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்கள் எண்ணில் அடங்காதவை.
மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஜயகாந்த்துடன் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர், 6 சகோதரி மற்றும் 6 சகோதரர்கள். சினிமாவில் மேல் ஏற்பட்ட காதலால் சென்னை வந்த விஜயகாந்த் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
விஜயகாந்தின் சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில செட்டிலாகிவிட்டனர். இந்த நிலையில், விஜயகாந்தின் தம்பிகளான பால்ராஜ், செல்வராஜ் தங்களுடைய குடும்பத்துடன் விஜயகாந்தின் மதுரை பூர்வீக வீட்டில் வசித்து வருகின்றனர்.
விஜயகாந்தின் தம்பி செல்வராஜ் மதுரையில் பிளாஸ்டிக் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், விஜயகாந்த் சென்னையில் செட்டில் ஆனதால் அவர் தன்னுடைய பூர்வீக வீட்டுக்கு செல்வதையே நிறுத்திக் கொண்டாராம். எப்போவாவது ஒரு முறை குலதெய்வ கோயிலுக்கு மட்டும் குடும்பத்துடன் வருவார் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |