நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய். தனது அப்பா இயக்கிய படங்களில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்பு நாளைய தீர்ப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 33 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது தனது 69வது படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இதுவே இவரது கடைசி படம் என்று அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ளார். அதன் பின்பு தான் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார்.
இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2026ம் ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் படத்தில் நடிப்பதற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், அவரது சொத்து மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
மனைவியின் சொத்து மதிப்பு என்ன?
நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 23 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளதால் சங்கீதாவிற்கு பிடிக்காமல் சென்றதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதாவிற்கு ரூ.400 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், லண்டனில் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.