விஜய்யை ஸ்கேலால் அடித்து வெளுத்து வாங்கினேன்... - வேதனைப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய்யை நான் ஸ்கேலால் அடித்து வெளுத்து வாங்குவேன் என்று தந்தை சந்திரசேகர் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் 10ம், 12ம் அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்தார்.
விஜய்யின் இந்தச் செயலை மக்களும், அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் வருவாரா? இல்லையா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு சேனலில் பேசும்போது, விஜய் குறித்து பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஊருக்கு வேண்டுமென்றால் விஜய் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், விஜய் சின்ன வயதில் என்னிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறார். ஒழுங்கா படிக்கவே மாட்டார். படி, படி என்று நான் ஸ்கேலை எடுத்து விஜய்யை பொளந்து கட்டுவேன்.
அடித்து அடித்து இடமே சிவந்துவிடும். சிறிது நேரம் எனக்கே மனசு கேட்காது. தேங்காய் எண்ணெய் கொண்டு வந்து சிவந்த அந்த இடத்தில் தடவிவிடுவேன். அந்த பருவத்தில் விஜய்யாகத் தான் நான் இப்போதுவரை பார்க்கிறேன் என்று மனம் திறந்து பேசினார்.