கேப்டனுக்காக மண் சோறு சாப்பிடும் ரசிகர்கள்.. கண்டுக் கொள்ளாத தளபதி- வைரல் புகைப்படம்!
விஜயகாந்த்திற்கு ரசிகர்கள் மண்சோறு சாப்பிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த்.
இவர் சினிமாவில் நடிக்கும் காலம் தொட்டு இன்று வரை பெரும்பாலான ரசிகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் என தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியுள்ளார்.
சமிபக்காலமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலும் ஓய்விலும் இருந்து வருகிறார்.
இவர் குறித்தான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிரபலங்களும் தன்னால் முடிந்த அளவு ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்
இந்த நிலையில் நடிகர் விஜய், விஜயகாந்த் குறித்து இதுவரையில் கண்டுக் கொள்ளாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனின் விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் தனக்கு வந்த “செந்தூரப் பாண்டி” என்ற படத்தை விஜயிற்கும் அவரின் அப்பா சந்திரசேகருக்கும் வழங்கி சினிமா வாழ்க்கைக்கு விதை போட்டார்.
மேலும் விஜயகாந்தின் உடல் நிலை சரியாக வேண்டும் என விஜய் ரசிகர் மன்றத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்ஆர்.கே.ராஜா தலைமையில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும், பிரம்மன் சன்னதியிலும் விஜயகாந்த் சித்திரை நட்சத்திரத்தில் அவருடைய பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்களே இவ்வாறு களத்தில் இறங்கிய போது விஜய் ஏன் பொறுமை காக்கிறார் என புரியவில்லை. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |