படக்குழுவுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் தளபதி.. வீடியோவை வெளியிட்ட முக்கிய பிரபலம் யார் தெரியுமா?
வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், யோகிபாபு, ஷ்யாம், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது சமூக வளைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
வாரிசு திரைப்படம்
வாரிசு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 'தளபதி' விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அதிரடி குடும்பத் திரைப்படம் தான் வாரிசு.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடித்த 66 வது திரைப்படமாகும்.
வாரிசு திரைப்படத்தினை பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, தெலுங்கு திரையுலக முன்னனி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை குவித்திருந்தது.
இந்நிலையில் வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், யோகிபாபு, ஷ்யாம், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது சமூக வளைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
Thalapathy @actorvijay - cute fight for our team is Wholesome ??❤️
— Vivek (@Lyricist_Vivek) January 9, 2024
‘Sixxxu.. Sixu Sixu’ @iamRashmika @iYogiBabu @ActorShaam @directorvamshi pic.twitter.com/1SzjyP7LMK
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |