விஜய் மீண்டும் நடிக்க முடிவு? காரணம் இது தானாம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அவர் நடிப்பி்ல் வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்தது தான்.
நீதிமன்றம் வரை சென்றும் இந்த படத்தை வெளியிட முடியாத நிலையில்,தமிழக சட்டசபைத் தேர்தல் பின்னர் தான் படம் வெளியாகும் என விஜய் ரசிகர்ககள் ஒரு முடிவு செய்து வருத்த்தில் இருந்தனர்.
விஜய்யும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சமயத்தில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், திரைக்கு வருவதற்கு முன்னரே ஜனநாயகன் முழுபடமும் கடந்த வௌ்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் கசிந்தது.

அதனை அறிந்த படக்குழுவினரும், தயாரிப்பு நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம், முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் கசிந்ததால், கே.வி.என் ப்ரடெக்ஸன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக புதிய படத்தில் நடித்து கொடுக்க விஜய் அதிரடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
அந்தப் படத்தை நெல்சன், அட்லி அல்லது லோகேஷ் ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் என குறிப்பிடப்படுகின்றது. இது விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |