நடிகர் விஜய் வீட்டின் வெளியே காக்க வைக்கப்பட்டாரா தாய் ஷோபா! வெடித்த பிரச்சினைக்கு தந்தை விளக்கம்!

Vijay shobana Sachandrasekhar
By Rooban Sep 28, 2021 08:45 AM GMT
Report

நடிகர் விஜய்யின் தாய் மற்றும் தந்தை இருவரும், காரில் அவரது வீட்டின் வாசல் முன்பு காக்க வைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த நிகழ்வில் பின்னர் இருந்தே, விஜய் மற்றும் அவருடைய தந்தைக்கு பிரச்சினை துவங்கி விட்டது. இதனால், நடிகர் விஜய், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து,

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை. அதிலிருந்தவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்கிறார்கள். என்று எஸ்.ஏ.சி தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்தார்.

மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தான் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்ததாக கூறினார்.

அந்த விடியோவில் அவர் பேசியதாவது, 'நானும் என் மனைவி ஷோபாவும் விஜய்யின் வீட்டின் முன் காரில் காத்திருந்ததாகவும், ஷோபாவை மட்டுமே உள்ளே வர அனுமதித்ததாகவும் அதனால் நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டதாகவும் தகவல் இடம்பெற்றிருக்கிறது.

அது தவறான செய்தி. எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை இருப்பது உண்மை தான். ஆனால் விஜய்க்கும் அவரது அம்மாவுக்கும் உறவு நன்றாக உள்ளது.

அதனால் அவரது அம்மாவை வெளியில் காத்திருக்க வைத்திருந்ததாக வெளியான தகவல் தவறு என்று விளக்கமளித்தார்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US