விஜய்யுடன் நடித்த பிரபல துணை நடிகர் திடீர் மரணம்...
புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் ஜெயசீலன். 40 வயதாகும் அவர் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருக்கிறார்.
தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் தப்பு தப்பாக பாடி வைரலானதை தற்போதும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மஞ்சள் காமாலை
ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்த அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார்.
மஞ்சள் காமாலை நோயால் படுத்த படுக்கையாக இருந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதனையடுத்து ஜெயசீலன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயசீலன் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் சினிமா வில்லன் நடிகர் சாய் தீனா அஞ்சலி செலுத்தினர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |